இலங்கையில் உள்ள சிறையில் வாடும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரி அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபயணமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
மூன்று நாட்களாக நடைபவணியாக சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தனர்.
இந்தப் பேரணி இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்த நிலையில் சிறைச்சாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.