கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் போலி நோட்டைக் கொடுத்து எரிபொருளை பெற முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களை இன்று (09) புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.