11 வயதுடைய பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்ததாக கூறப்படும் தம்பதியரைக் கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பழிவாங்கும் வகையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது வெட்டப்பட்ட தலைமுடியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு பொலிஸ் நிவையத்துக்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின்படி, சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.