உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்னப்புவ பிரதேச சபைக்குப் போட்டியிடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வேட்புமனுப் பட்டியலை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மதில் மீது வைத்துவிட்டு மறந்து போனதால், இறுதித் தினத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வென்னப்புவ பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இம்முறை கிடைக்கவில்லை.
வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் இறுதித் தினமான 21 ஆம் திகதி (நேற்றுமுன்தினம்), வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் வென்னப்புவ தொகுதி அமைப்பாளர் சரத் பரன்பொல வருகை தந்த போது, வேட்புமனுப் பட்டியல் ஐ.தே.க தலைமையகத்தில் வைத்து விட்டு வந்தது தெரியவந்தது.