அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான 75 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் குறிக்கும் வகையில் அவரது வருகை அமைந்துள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தமது ரு விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அவரது வருகை பொருளாதார செழுமையை வளர்ப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் தற்போதைய சீர்திருத்தங்களுக்கும் அமெரிக்காவின் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றது என்றும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.