எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் IND-TN06-MM-948 படகில்10 பேர் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவின் நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவார்கள்.
கடற்படையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் மீன் வளர்ப்பு துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் திருக்கோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் 21.08.2023 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.