0
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் 9 பேரும் நேற்று (08) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 9 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.