1
யாழ். புன்னாலைக்கட்டுவன், திணைப்புலம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு ஒன்று பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். எனினும், மின்னல் தாக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், பயன் தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.