கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்ள காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (28) இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருங்கள்
வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
திறந்த வெளியில் உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது.
மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றை பயன்படுத்தவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்
கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதால் விழப்புடன் இருங்கள்
அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்