இந்தியாவில் இருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் உட்பட 6 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த நால்வரை வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற இருவர், படகில் ஏற்றி வந்த வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வருகை தந்த திருகோணமலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த நால்வரும், படகு ஓட்டிகள் இருவருமே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளே மண்டபம் அகதி முகாமில் இருந்து படகில் ஏற்றி வரப்பட்டுள்ளனர்.