பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
அலரி மாளிகையில் இன்று மாலை 05 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது அதிகரிக்கப்பட்டாலும் பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லையென்பதால், கட்டடங்களும் போதுமானதாக இல்லை என பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விடயங்கள் தொடர்பாக இன்றைய கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.