செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் காண்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு!

காண்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு!

1 minutes read

கண் குறைபாட்டிற்காக கண்ணாடி அணிவதற்கு பதிலாக பெரும்பாலானவர்கள் தற்போது காண்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். ஒரு சிலர் அழகுக்காகவும் அணிகின்றனர். கண்ணாடி அணிவதை விட இதில் சில பயன்கள் இருக்கின்றன.

அதேநேரம் காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கே காண்போம்.

தரமான காண்டாக்ட் லென்ஸ்களை உபயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது. நம்பகமாக பிராண்டுகளில் இருந்து காண்டாக்ட் லென்சை வாங்க வேண்டும். விலை மலிவாக இருக்கிறது என்று தரம் குறைந்த லென்சுகள் வாங்கி உபயோகிக்ககூடாது. இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பயணத்தின் போது சிரமத்தை ஏற்படுத்தும்.

பயணம் செல்வதற்கு முன் கண் மருத்துவரை அணுகி காண்டாக்ட் லென்ஸ் அணியலாமா என்பது குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பயணம் மேற்கொள்கையில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்த தேவையான திரவங்களையும், மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும்.

வறண்ட காற்று நிலவும் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களென்றால் கண்கள் வறண்டு போகாமல் காக்கும் மருந்துகளையும் கையோடு வைத்துக்கொள்வது அவசியம்.

பயணம் மேற்கொள்ளும் போது எப்போதும் கூடுதலாக ஒரு ஜோடி காண்டாக்ட் லென்ஸ் எடுத்து செல்வது சிறந்தது. மேலும் மூக்கு கண்ணாடியையும் தவறாமல் எடுத்துசெல்ல வேண்டும். விடுமுறையை கழிப்பதற்காக செல்லும் போது நீந்துவதற்கு திட்டமிட்டிருந்தீர்கள் என்றால் தரமான கண்ணாடிகளை உபயோகிப்பது நல்லது. இதனால் நீந்தும் போது கண்கள் வறண்டு போவது தடுக்கப்படும்.

காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கண்கள் சிலநேரம் சூரிய ஒளியால் பாதிப்பை உணரக்கூடும். ஆகையால் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலான கண்ணாடிகள் அணிவது அவசியம்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More