நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் இதய குழாய்களில் இரண்டு அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.
இதனை அடுத்து அருண்பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன், ’சித்தப்பா ஒரு இரும்பு மனிதர், அவரை யாராலும் எதுவும் அசைக்க முடியாது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். கண்டிப்பாக அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.