செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

0 minutes read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. முதல் நாளில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படத்துக்கு, அதன் பின்னர் வசூல் குறைந்துபோனது.

இதற்கிடையே, இப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் ‘ரெட்ரோ’ படம் ஒரு சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரெட்ரோ படத்தின் மூலமாகக் கிடைத்த இலாபத்தில் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயைத் தன்னுடைய அகரம் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.