துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் அதனை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதற்கிணங்க இன்றும் நாளையும் இரண்டு தினங்களுக்கு துறைமுக நகர ஆணைக்குழு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான வாக்களிப்பு 20 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேவேளை, இந்த தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவருக்கும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.