இருமல், காய்ச்சல், உடல் உஷ்ணத்தால் வறட்டு இருமல், சளி இருமல், கக்குவான். ஆஸ்துமா பிரச்சனை போன்றவற்றாலும் வரக்கூடியதுதான். இருமல் இருக்கும் போது ஆரம்ப கட்டத்தில் கைவைத்தியம் செய்து குணப்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்.
இருமல் வந்தவுடன் மருந்து எடுத்துகொள்பவர்கள் முன்னதாக இந்த கை வைத்தியம் செய்து பார்க்கலாம். இதன் மூலம் படிப்படியாக இருமல் குறைந்துவிடும். அப்படியான எளிமையான வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
சிலருக்கு இருமல் அடுக்குதொடர் போன்று தொடர்ந்து இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் இருமலை அதிகமாக எதிர்கொள்வார்கள். இவர்கள் பாதிப்பில்லாமல் இருமல் நீங்க துளசி கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுக்கவும். பிறகு இதில் பனங்கற்கண்டு சேர்த்துகாய்ச்சி குடிக்க வேண்டும்.
நன்றி-தமிழ் நியூஸ்