நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக இடைநிறுத்தம் மின் விநியோகத்தை பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
நுரைச்சோலை மின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து மேலும் கூறுகையில்,
எரிபொருளால் இயக்கப்படும் ஒரு மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது.
எனினும் தொடர்ந்து நிலவும் மழை காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் தேவையானளவு மின்சாரத்தை வழங்கும் என மேலும் தெரிவித்தார்.