கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் நங்கூரமிட்டுள்ள எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் பெரும்பாலும் அடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது எந்த விதமான தீப்பிழம்புகளும் கப்பலில் இல்லையெனத் தெரிவித்த இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தயா ரத்நாயக்க, கப்பலை சூழ புகை மண்டலம் தொடர்ந்தும் வெளிவந்தவண்ணமே உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் சேதங்கள் மற்றும் பிற எதிர்கால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.