காபூல்: அமெரிக்காவில் கடந்த 2001ல் நியூயார்க் இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிராவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் பலியாகினர். இதையடுத்து, அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. அப்போது அங்கிருந்த தலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சியை அகற்றியது.
அப்போது முதல், ஆப்கானின் பக்ரம் விமானப்படை தளத்தை அமெரிக்க ராணுவம் தனது முக்கிய படைத்தளமாக மாற்றி பயன்படுத்தி வந்தது. தற்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதால், பக்ரம் விமானப்படை தளத்தை 20 ஆண்டுகளுக்கு பின்பு, ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் அமெரிக்க படைகள் நேற்று ஒப்படைத்தன.
சிறப்பு அம்சங்கள்
- பக்ரம் விமானப்படை தளம் 2001ல் அமெரிக்க படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
- 2006ம் ஆண்டு ரூ. 717.50 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டது.
- இது 12 ஆயிரம் நீளமுள்ள 2 ஓடுதளங்களை கொண்டது.
- 110 தடுப்பு அரண்கள், 3 விமான நிறுத்துமிடங்கள், குண்டு துளைக்காத சுவர்கள், விமானக் கட்டுப்பாட்டு அறை கொண்டது.
- அவசர சிகிச்சை பிரிவு உள்பட 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கொண்டது.
- சிறைச்சாலை வசதியும் கொண்டது.