இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
18 பெண்களும் 14 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 268ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 869 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 499 ஆக பதிவாகியுள்ளது.