காலையில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நுங்கு ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நுங்கு – 4
மாதுளம் பழம் – 1
ஆப்பிள் – 1
மாம்பழம் – 1
வாழைப்பழம் – 1
நன்னாரி சர்பத் – 1 டீஸ்பூன்
திராட்சை (பச்சை, கருப்பு) – கால் கப்
தேவையான பொருட்கள்
மாம்பழம், வாழைப்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
திராட்சையை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சத்தான சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட் ரெடி.