தேவையானவை:
கத்திரிக்காய் – கால் கிலோ,
வெங்காயம்,
தக்காளி – தலா ஒன்று,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
பிரியாணி இலை – ஒன்று,
சோம்பு – கால் டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.
நன்றி-தினகரன்