செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்!

இலங்கையில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்!

1 minutes read

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் தீர்மானம் தாக்கம் செலுத்தாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்விற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும்இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதத்தை விடவும் அதிகரிக்காத எண்ணிக்கையிலானோருக்கு ஒன்றுகூட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More