செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆப்கான் காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி வீழ்ந்து இருவர் பலி

ஆப்கான் காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி வீழ்ந்து இருவர் பலி

1 minutes read

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பறந்து கொண்டிருந்த விமானத்தின் சக்கரங்களை தங்களை கட்டிக் கொண்டு சென்ற இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

Two people tie themselves to wheels of aircraft leaving Kabul, fall to death

இது தொடர்பான டுவிட்டர் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அது கபூல் விமான நிலையத்திலிருந்து விமானமொன்று உயர எழும்போது, அதிலிருந்து இருவர் தவறுதலாக வீழ்வதை வெளிக்காட்டியுள்ளது.

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

விமான நிலையத்தின் வளாகத்தில் மக்கள் திரண்டதால், அமெரிக்கப் படைகள் வான் நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More