தமிழ் திரையுலகில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வரும் இயக்குனர் ஷங்கர், இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷங்கர். 1993-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். தொடர்ச்சியாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களையே இயக்கி வருவதால் பலரும் அவரை ‘பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்’ என்றே அழைக்கிறார்கள்.
இதுவரை ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, நாயக் (முதல்வன் இந்தி ரீமேக்), ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘நண்பன்’, ‘ஐ’, ‘2.0’ ஆகிய 13 திரைப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் புதிய படம், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ஷங்கர்.
தமிழ் திரையுலகில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வரும் இயக்குனர் ஷங்கர், இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் #HappyBirthdayShankar என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.