0
மோகன்லால்- மம்முட்டிக்கு பிறகு மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ப்ருத்விராஜ். சினிமாவில் நடிக்க வந்து 12 ஆண்டுகளில் 80 படங்களில் நடித்து விட்ட அவர், தற்போது கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் வருடத்திற்கு 7 முதல் 8 படங்கள் வரை முடித்து வருகிறார் ப்ருதிவிராஜ்.
ஆரம்பத்தில் ரொமான்டிக் கதைகளாக நடித்து வந்த அவர், தற்போது ஆக்சன் திரில்லர் கதைகளில் அதிகமாக நடித்து வருகிறார். குறிப்பாக, போலீஸ் வேடமென்றால் இப்போது ப்ருதிவிராஜ்தான் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு மலையாள சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வேகமாக வளர்ந்து நிற்கிறார் ப்ருத்விராஜ்.
இந்த நிலையில், ஓணம் பண்டிகைக்கு ப்ருத்விராஜின் நடிப்பில் சப்தமஸ்ரீ தஸ்கரா என்ற படம் திரைக்கு வருகிறது. ஆசிப் அலியும் இன்னொரு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரீனு மேத்யூஸ் நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹீரோ என்ற படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் வேடத்தில் நடித்த ப்ருத்விராஜ் அப்போது சண்டை பயிற்சியின் அனைத்து வித்தைகளையும் திறம்பட பயிற்சி எடுத்த பிறகே அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.
விளைவு, அப்போது அவர் கற்ற விசயங்கள் அவருக்கு இப்போது பயன்பட்டு வருவது மட்டுமின்றி இதே படத்தில் தன்னுடன் நடித்த ஆசிப் அலிக்கும் தனது சார்பில் ஸ்டன்ட் பயிற்சிகளை கொடுத்தாராம் ப்ருத்விராஜ். ஒரு நிஜமான ஸ்டன்ட் மாஸ்டர் போன்று ப்ருதிவிராஜ் கொடுத்த பயிற்சியை பார்த்து அப்பட யூனிட்டே ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றதாம்.