உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஓமானில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெத்தும் நிஸ்ஸங்க 76 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 123 ஓட்டங்களை பெற்று 39 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இவர்களைத் தவிரவும் அணித்தலைவர் தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ண,மஹீஷ் தீக்சன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழத்தினர்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி விளையாடிய இரண்டு (ஓமான், பப்புவா நியூ கினியா) பயிற்சி போட்டிகளிலும் வெற்றியீட்டிள்ளது.
இந்த வெற்றியின் மூலம் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தகுதிச் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.