குழந்தை பாக்கியம் பற்றி ஒருவரது கைரேகையைக் கொண்டும் கணிக்க முடியும். ஒருவரது கையில் சுண்டு விரலுக்கு கீழே திருமண ரேகையின் மீது இருக்கும் கோடுகள் தான் குழந்தை ரேகை. சீன கைரேகை சாஸ்திரத்தில், இந்த கோடுகள் எத்தனை குழந்தைகள் ஒருவருக்கு பிறக்கும் மற்றும் குழந்தைகளின் ஆயுள் நிலையைக் குறிக்கும்.
திருமண ரேகையின் மீது எத்தனை குழந்தை ரேகைகள் உள்ளதோ, அத்தகைய குழந்தைகள் பிறக்கும். மேலும் அந்த ரேகைகளின் அளவு மற்றும் வெளிப்படும் நிலையைக் கொண்டு என்ன குழந்தை பிறக்கும் என்றும் சீன கைரேகை சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்போது அதுக் குறித்து விரிவாக காண்போம்.
இரட்டைக் குழந்தைகள்
திருமண ரேகையின் மீதுள்ள கோடுகளின் முனைகளில் பிளவு ஏற்பட்டிருந்தால், அது அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளதைக் குறிக்கும்.
ஆண் குழந்தை
ஆழமான மற்றும் பரவலான குழந்தை ரேகை, ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.
பெண் குழந்தை
குறுகிய மற்றும் ஆழமற்ற குழந்தை ரேகையானது, பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கும்.
பலவீனமான குழந்தை
திருமண ரேகையில் இருந்து ஆரம்பிக்கும் போது பிளவுடன் குழந்தை ரேகை இருந்தால், அது குழந்தை பலவீனமாக இருப்பதையும், பிறக்கும் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும் என்பதையும் குறிக்கும்.
வளர்ப்பதில் கடினம்
குழந்தை ரேகையின் முனை கம்பி போன்று வளைந்து ஒரு தீவு போல காட்சியளித்தால், அது குழந்தையை வளர்ப்பதில் மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருப்பதைக் குறிக்கும்.
பிரச்சனையுள்ள குழந்தை
ஒருவேளை குழந்தை ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு வளைந்து நெளிந்து இருந்தால், அது அவர்களுக்கு உடலில் பிரச்சனையுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கும்.
ஆண்களின் குழந்தை ரேகை
ஆண்களின் கைகளில் குழந்தை ரேகை இருந்தால், அது குழந்தையின் ஆரோக்கியத்தைக் குறிக்கும். ஒருவேளை அந்த குழந்தை ரேகை தெளிவற்று அல்லது மற்ற ரேகையுடன் கலந்து இருந்தால், அது குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும் என்பதைக் குறிக்கும்.
பெண்களின் குழந்தை ரேகை
பெண்களின் கைகளில் உள்ள குழந்தை ரேகை, எத்தனை குழந்தை மற்றும் குழந்தையின் தோற்றத்தைக் குறிக்கும்.
நன்றி | நியூ லங்கா