ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சி காலத்தை காட்டிலும் முறையற்ற வகையில் எமது அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் விலைமனுகோரல் இல்லாமல் வழங்கியுள்ளது. என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே மக்களிடம் அனைத்தையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்தில் இரண்டு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன . திறைச்சேரிக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளையும், புதிதாக நிர்மாணிக்கப்படும் மின்நிலையத்திற்கு எரிவாயு விநியோகத்தையும் அமெரிக்காவின் நியூபோர் நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பிலான ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யுகதனவி மின்நிலையத்தை அபிவிருத்தி செய்வதும், இயற்கை எரிவாயு திரவ விநியோகம் தொடர்பிலான பகிரங்க விலைமனுக்கோரல் கடந்த பெப்ரவரி மாதம் விடுக்கப்பட்டது.
நிர்வாக கப்பல் , எரிவாயு விநியோக குழாய் ஆகியை தொடர்பிலான மனுக்கோரல் மாத்திரமே விடுக்கப்பட்டது,எரிவாயு விநியோகத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
அப்போது இந்த அமெரிக்க நிறுவனம் விலைமனுக்கோரலில் பங்குப்பற்றவில்லை. தற்போது எவ்விதமான விலைமனுக்கோரலும் இல்லாமல் இந்த நிறுவனத்திற்கு பங்குகள் வழங்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும்.
இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் பல முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் எந்த அரசாங்கமும் விலைமனுகோரல் இல்லாமல் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த அரசாங்கங்களை காட்டிலும் எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.பிற நாடுகளுக்கு தேசிய வளங்களை வழங்குவது ஆபாத்தானது,அதிலும் அமெரிக்கா என்பது மிகவும் அச்சுறுத்தலானது.
இலங்கையின் சுயாதீனத்தில் தொடர்ந்து அமெரிக்கா தலையிடுகிறது. குடந்த காலங்களில் பல அழுத்தங்களை பிரயோக்கிறது. இராணுவத்தினரை தண்டித்தல், சமஷ்டி அரசியல் யாப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.
வலு சக்தி துறை நாட்டினதும்,அரசாங்கத்தினதும் இருப்பிற்கு பிரதானமானது. இலங்கைக்கு எரிவாயு விநியோகிக்கும் உரிமை அமெரிக்க நிறுவனத்திற்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது.
வலுசக்தியின் அதிகாரங்கள் அமெரிக்கா வசம் சென்றால் அமெரிக்கா இதற்கு முன்னர் விதித்த கட்டளைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய வரும். அத்துடன் சீனா,இந்தியா ம்ற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை பகைத்துக் கொள்ள நேரிடும்.
அமெரிக்காவின் ஆதிக்கம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உலக நாடுகளின் நடப்பு நிலவரங்கள் ஊடாக அறிந்துக் கொள்ளலாம்.
அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்கால தலைமுறையினர் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே தவறுகளை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளோம் என்றார்.