பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிளாஸ்கோவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதன்போது கொரோனா பேரிடர், பொருளாதாரம், சுகாதார அடித்தளத்தைப் பலப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ரோம் நகரில் இருந்து புறப்பட்ட மோடி, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுற்றுசூழல், கரியமில வாயு வெளியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.