பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16ஆம் திகதி (செவ்வாய்கிழமை) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, “தடையை மீறி செவ்வாய்க்கிழமை திட்டமிட்ட போராட்டத்தை எமது கட்சி முன்னெடுக்கும்.
செவ்வாய்கிழமை போராட்டத்தை நடத்தும் திட்டத்தை நாங்கள் அறிவித்ததை அடுத்து, வெகுஜன போராட்டத்தை தடுக்கும் வகையில் அவசரமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடித்து எங்கள் போராட்டத்தை நடத்துவோம்.
முக மூடி அணிந்து வருமாறும், உடல் இடைவெளியை பேணுமாறும் எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.