நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சபாபதி’ படம் வெளியாகி, வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் சபாபதி.
இதில் கதையின் நாயகனாக நடிகர் சந்தானம் நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ப்ரீத்தி வர்மா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர் புகழ், உமா பத்மநாபன் சாயாஜி ஷிண்டே மதுரை முத்து மயில்சாமி வம்சி கிருஷ்ணா சுவாமிநாதன் மாறன் முல்லை கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,
”பேச்சு திறன் உள்ள சபாபதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கிறார். இதில் அவர் வழக்கமான நடிப்பை விட வித்தியாசமாக நடித்திருக்கிறார்.
ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் விதி விதியின் விளையாட்டு நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அப்படியானதொரு சுவராசியமான விதியின் விளையாட்டை தான் இப்படத்தின் திரைக்கதையாக்கி இருக்கிறோம்” என்றார்.
‘சபாபதி’ படத்தை நடிகர் சந்தானத்தின் பதினைந்து ஆண்டு கால நண்பர் ரமேஷ் குமார் தயாரித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் வலிமை மிக்க நிதியாளரான மதுரை அன்பு செழியனின் பட தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் இப்படத்திற்கு நிதி உதவி செய்திருப்பதுடன் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
இதனிடையே நடிகர் சந்தானம் ‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் சூர்யாவிற்கு எதிராகவும், அவர் சார்ந்த சாதிக்கு ஆதரவாகவும் பேசி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த பரபரப்பான விடயம் ‘சபாபதி’ படத்தை வெற்றி பெற செய்யுமா..! என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.