வாஷிங்டன்,
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நஷ்வேலி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.
அடுமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.