செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரியந்த குமாரவின் படுகொலை | 235 பேர் கைது | 900 நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை!

பிரியந்த குமாரவின் படுகொலை | 235 பேர் கைது | 900 நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை!

1 minutes read

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வழக்கில் இதுவரை பாகிஸ்தானில் 235 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 900 நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சியால்கோட் பொலிஸார் 900 சந்தேகத்திற்குரிய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக நகரம், அருகிலுள்ள கிராமங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 235 பேரில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களான மொஹமட் தல்ஹா மற்றும் ஃபர்ஹான் இத்ரீஸ் ஆகியோர் அடங்குவர்.

பிரியந்த குமாராவின் பிரேத பரிசோதனை சியால்கோட்டின் அராமா இகுபால் போதனா வைத்தியசாலையில் நிறைவடைந்துள்ளது.

பின்னர் பிரியந்த குமாராவின் உடல் 1122 ஆம்பியூலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் லாகூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை தலைமை அமைச்சரவை செயலாளர் சியால்கோட் தாஹிர் ஃபரூக் தெரிவித்தார். 

சட்ட ரீதியான நடைமுறைகள் முடிந்த பின்னர்  பிரியந்த குமாராவின் சடலத்தை கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரியந்த குமாராவின் மனைவி நிரோஷி தசநாயக்க, கொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி வழங்குமாறு பாகிஸ்தான் மற்றும் இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது இவ்வாறிருக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பிரதம அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றனர், 

மேலும் அட்டூழியங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) உடனான ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More