சென்னை
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும் ,விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார் .
இந்நிலையில் ‘மாஸ்டர் ‘படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல் ‘வாத்தி கம்மிங்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.இந்த பாடலில் விஜய்யின் நடனம் அனைவரயும் கவர்ந்தது .
தற்போது ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடல் 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது .