நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யு.டபிள்யு.டீ.சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
டொலர் நெருக்கடி காணப்படுகின்ற போதிலும், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய காலத்தில் அவ்வப்போது தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யப்படும். எரிபொருளை இறக்குமதி செய்வதில் எவ்வித சிக்கலும் கிடையாது.
ஆகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்குமாயின் அவை உண்மைக்கு புறம்பானவையாகும். மக்கள் இது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என்றார்.