வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
தேவையான பொருட்கள்
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப், வெள்ளை எள் – கால் கப்,
வறுத்த காய்ந்த மிளகாய் – 2,
உப்பு, பெருங்காயத்தூள் – தேவையான அளவு.
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெள்ளை எள்ளை போட்டு நன்றாக பொரிந்து வாசனை வரும் வரை வறுத்து பின் ஆறவைக்கவும்.
அதே போல் காய்ந்த மிளகாயையும் வறுத்த கொள்ளவும்.
இரண்டும் நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான வேர்க்கடலை – எள்ளுப் பொடி ரெடி.
சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். தோசை, இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
நன்றி | மாலை மலர்