தற்போதைய காலநிலை காரணமாக பிரதான நீர் ஆதாரங்களின் நீர் மட்டங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகின்றது. தற்போது நிலவும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என அந்த சபை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துவதுடன், அதனை வீண் விரயமாக்குவதனை தவிர்க்குமாறும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.