செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெண்கள் சுடிதாரில் அழகாக தெரிய என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் சுடிதாரில் அழகாக தெரிய என்ன செய்ய வேண்டும்?

2 minutes read

பெண்கள் பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் சுடிதார்களை எடுக்க வேண்டும்.

இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகு சாதன பொருட்களுக்கும் தான்.

தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

ஆகவே மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய ஆடைகள் தான். ஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்ப மாட்டார்கள். தான் உடுத்தும் சுடிதார் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால் நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர் அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும். முதலில் நாம் எடுக்கும் சுடிதார் கலர் நம்முடைய டிசைன்களுக்கு ஒத்துவருமா “? என்று பாருங்கள்.

அதை விட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்ன தான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை ” டல்லாக ” தான் காட்டும்.

எனவே அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் கருப்பு நிறமாக உள்ளவர்கள், ” லைட் நிறத்தில் உள்ள ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த சுடிதாரை தேர்ந்தெடுக்கலாம்.

லைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயில் அல்லது ஏதாவது காமினேஷன் கலர் இது மாதிரி ” லைட் நிறத்தில் உள்ள சுடிதார்களை தேர்வு செய்யுங்கள்.

கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளூ, பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட் அல்லது ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம். கலராக உள்ளவர்களுக்கு ” டார்க் கலரில் எந்த நிற வகையான சுடிதார்கள் போட்டாலும் அழகாக தெரியும்.

பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் சுடிதார்களை எடுக்க வேண்டும். குண்டாக உள்ளவர்கள் காட்டன் சுடிதார் அணிந்தால், அது மேலும் அவர்களை குண்டாகத் தான் காட்டும்.

அதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும். ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலை பாடுகள் செய்த காட்டன் அல்லது சில்க் காட்டன் சுடிதார் தேர்வு செய்யலாம்.

அது அவர்களை சற்று குண்டாக காட்டும். வெயில் காலத்தில், சிந்தடிக் வகை சுடிதார்களை உபயோகிக்க வேண்டாம். அது மட்டுமல்ல, என்னதான் சுடிதார்களை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது.

முடிந்த வரையில், சுடிதார்களை அம்பர்லா மாடலில் தைத்தால், பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாக தெரியும். தேர்வு செய்யும் சுடிதாரை, நாம் அழகாக தெரிய தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More