செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆஸிக்கெதிரான முதல் ரி-20: இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆஸிக்கெதிரான முதல் ரி-20: இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

0 minutes read

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 53 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 30 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துஸ்மந்த சமீர, சமிக்க கருணாரத்ன மற்றும் பினுர பெனார்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

தற்போது 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி, தற்போது களமிறங்கவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.