தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் துருவியது
உருளைக்கிழங்கு – 1 வேகவைத்தது துருவியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
சோள மாவு – 3 தேக்கரண்டி
பிரட் தூள் – 1/4 கப்
கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி நறுக்கியது
எண்ணெய்
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் துருவிய பன்னீர், வேகவைத்தது துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், உப்பு, சோள மாவு, பிரட் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தயும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அடுத்து கபாப் செய்ய பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து ஒரு குச்சியின் நடுவில் வைத்து நீளவாக்கில் உருட்டி கொள்ளவும். ஒரு அகலமான பானில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் செய்த கபாப்பை வைக்கவும். பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து கபாப் -ன் அனைத்து பக்கங்களையும் திருப்பி விட்டு பிரை செய்யவும். சூடான பன்னீர் ஷீக் கபாப்பை புதினா சட்னியுடன் பரிமாறவும்.
நன்றி -தினகரன்