பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் குறிப்பிட்டு, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய, சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வகுப்பில் ஒரு மாணவர் ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை சுகாதார பாதுகாப்புடன் கொண்டுவந்து வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவௌியைப் பேணி செயற்படுவது உள்ளிட்ட சுகாதார வழிவகைகளும் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.