செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கூந்தல் பராமரிப்பு சிறப்பாக இருக்க

கூந்தல் பராமரிப்பு சிறப்பாக இருக்க

3 minutes read

தலைக்குளியலுக்கு முன்பு ஷாம்பு போடுவதற்கு முன்பு கூந்தலில் எண்ணெய் தடவுவது அவசியம். குறிப்பாக தலைக்குளியலுக்கு முன்பு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்பு உச்சந்தலையிலும் கூந்தலிலும் ஹேர் ஆயில் தடவி மசாஜ் செய்வதை உறுதி செய்யவும்.

தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பெரும்பாலான ஷாம்புகளில் முடி இழைகளில் இருந்து அத்தியாவசிய எண்ணெயை அகற்றகூடிய கடுமையான பொருள்கள் உள்ளன. அதனால் ஷாம்புக்கு முன்பு எண்ணெய் பயன்பாடு அவசியம்.

முடியை அகற்றவும்

ஷாம்புவை தேய்ப்பதற்கு முன்பு முடியில் இருக்கும் சிக்குகளை அகற்றுவது நல்லது. ஏனெனில் தலைக்குளியலுக்கு பிறகு கூந்தல் சிக்கலை சந்திக்கும் அப்போது அதை அகற்றுவது கடினமாக இருக்கும். முடி பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கும். எளிதில் உடையவும் செய்யும்.

முடியை நான்கு பிரிவுகளாக பிரித்து சிக்கலை அகற்றலாம். தலைக்குளியலுக்கு முன்பு கூந்தலை சிக்கில்லாமல் சீவி விடுங்கள். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. மேலும் உச்சந்தலை சருமத்துளைகள் அடைப்பதை தடுக்கிறது. இது பிளவு முனைகளையும் குறைக்கும்.

கூந்தலை வெற்று நீரில் அலசுங்கள்

தலைக்குளியலில் நேரடியாக ஷாம்பு பயன்படுத்தாமல் முதலில் வெற்றுநீரில் கூந்தலை அலசி பிறகு ஷாம்பு பயன்படுத்தவும். கூந்தலை அலச வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் பயன்படுத்தவும். அதிக சூட்டில் குளிக்கும் போது அது தலைமுடியை வறட்சியடைய செய்யலாம். மேலும் உச்சந்தலையை எரிச்சலுக்கு ஆளாக்கலாம். வெதுவெதுப்பான நீர் உச்சந்தலை சருமத்துளைகளை திறக்க செய்யலாம்.

ஷாம்புவை நீர்த்துபோக பயன்படுத்துங்கள்

ஷாம்புவை எப்போதும் அப்படியே பயன்படுத்த கூடாது. அதை நீரில் கலந்து பயன்படுத்துங்கள் இது முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்தப்படும் ஷாம்புவின் செறிவை குறைக்கும். சில நேரங்களில் ஷாம்புவில் கடுமையான இராசயனங்கள் இருக்கலாம். மேலும் அதை நீர்த்து போக செய்வதன் மூலம் முடி சேதத்தை குறைக்கலாம்.

தலைமுடிக்கு கண்டிஷனர்

தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு அதற்கு கண்டிஷனர் பயன்படுத்துவதை தொடருங்கள். கண்டிஷனரை நேரடியாக உச்சந்தலையில் பயன்படுத்த வேண்டாம். கண்டிஷனரை பயன்படுத்திய பிறகு சீப்பு கொண்டு சீவுவதன் மூலம் அனைத்து இடங்களிலும் சீரான அளவு பயன்படுகிறது. 1-2 நிமிடங்கள் வரை விட்டு பிறகு கூந்தலை அலசலாம். எக்காரணம் கொண்டும் சிறு துளி அளவு கூட கண்டிஷனர் கூந்தல் இழைகளில் விட வேண்டாம். இது மந்தமான தோற்றத்தை உண்டாக்கும்.

உச்சந்தலையை மென்மையாக ஸ்க்ரப் செய்யுங்கள்

உச்சந்தலையை மென்மையாக ஸ்க்ரப் செய்யுங்கள். உச்சந்தலையில் வட்ட வடிவில் மெதுவாக ஸ்க்ரப் செய்யுங்கள் ஸ்க்ரப் கடுமையாக இருக்க வேண்டாம். விரல் நுனியில் அழுக்கு, தோல் செதில்கள், எச்சங்கள் மற்றும் இயற்கை எண்ணெய்களை தளர்த்தலாம். ஸ்க்ரப் செய்த பிறகு ஒரு நிமிடம் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

லைக்கு மசாஜ்

ஷாம்பு செய்யும் போது தலையை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். முன்பக்கத்திலிருந்து பின்புறம் மற்றும் பின்புறத்திலிருந்து முன்புறம் என பல நிமிடங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்யவும். இது உச்சந்தலையை தூண்டவும் தோலுரிக்கவும் உதவும்.

குளிர்ந்த நீரில் கழுவவும்

தலைக்குளியலுக்கு பிறகு முடியை சுத்தம் செய்ய குளிர்ந்த நீரில் கழுவி விடவும். குளிர்ந்த நீர் கூந்தலில் இருக்கும் கண்டிஷனரை வெளியேற்றி, வெட்டுகாயங்கள் மூடி ஒவ்வொரு முடி இழைகளிலும் ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது.

கடுமையாக தேய்க்க வேண்டாம்

தலைக்குளியலில் கூந்தலை கடுமையாக தேய்க்க வேண்டாம். எப்போதும் தலைமுடியை மென்மையான டவலை கொண்டு சுத்தம் செய்யவும். தலைமுடியை மென்மையாக உலரவிடுங்கள். இது கடுமையான சேதத்தை உண்டாக்கும் மற்றும் முடி மிகவும் மந்தமானதாக இருக்கும். முடியில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து அப்படியே உலர விடலாம்.

இவையெல்லாம் சீராக செய்தாலே கூந்தல் பராமரிப்பு சிறப்பாக இருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More