செம்பருத்தி பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் குறித்த் ஆய்வில் இலேசான உயர் ரத்த அழுத்தம் உள்ள டைப் 2 நீரிழிவு நோயாளிகள் செம்பருத்தி டீ எடுத்துகொள்வதால் உயர் இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவுகள் உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.
மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது.
சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது.