எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.