எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் எரிபொருள் கிடைத்ததும் அதன் பணிகள் முன்னெடுக்கப்படுமெ மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் கிடைக்காததால் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் நாட்டில் தினமும் சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த நெருக்கடிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.