வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூடப்படுகின்றன.
அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW