0
அநுராதபுரம் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 08 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டது.
தலா 50,000 ரூபா பெறுமதியான சரீர பிணை வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.