யாருக்கும் கிடைக்காத இன்பம், உடல் ஆரோக்கியம், மன அமைதி இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும். உடல் சூடு சமமாகும். நல்ல பிராண சக்தி உடல் முழுக்க பரவும்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனித்து 20 விநாடிகள். பின் கட்டை விரலை உள்ளங்கை மத்தியில் மடக்கி வைத்து மற்ற நான்கு விரல்களை கட்டை விரலின் மேல் வைத்து மூடவும். படத்தை பார்க்கவும். இப்பொழுது மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.
பின் உங்களது மனதில் நான் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். எனது உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நல்ல பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. எனது இதயத் துடிப்பு சீராக உள்ளது. ஜீரண மண்டலம், மூச்சோட்ட மண்டலம் சிறப்பாக இயங்குகின்றது. நான் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன்.
மன அமைதியுடன் வாழ்கிறேன் என்று ஆழ்மனதில் நினைக்கவும். பின் இந்த உடலில் உள்ள உயிர் சக்தியை, உயிர் ஆற்றலை நெற்றிப் புருவ மையத்தில் நினைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். இந்த உடலை இயக்கும் உயிர் ஆற்றலாக நான் விளங்குகிறேன். இந்த உயிர் ஆற்றல் மூலம் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வளமாக, நலமாக, ஆரோக்கியமாக, அமைதியாக, ஆத்மானந்தமாக வாழ்வேன் என்று ஐந்து நிமிடம் ஆதி முத்திரையில் தியானிக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
மேற்குறிப்பிட்ட தியானத்தை தினமும் காலை, மாலை பயிலுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வு மலரும். உடல் ஆரோக்கியம், உள் அமைதி, ஆத்மானந்தம் கிடைக்கும். வாழ்வில் நீங்கள் நினைத்த காரியங்களை வெற்றியாக முடிக்கலாம். யாருக்கும் கிடைக்காத இன்பம், உடல் ஆரோக்கியம், மன அமைதி இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும். உடல் சூடு சமமாகும். நல்ல பிராண சக்தி உடல் முழுக்க பரவும்.
நன்றி | மாலை மலர்