குறட்டை வந்தால் நமது உடலில் நுரையீரல் இயக்கம் சரியாக இல்லை என்று அர்த்தம், மூச்சோட்ட மண்டலம் பாதிப்பால் வருகின்றது. இதற்கு தீர்வு முத்திரையும், நாடிசுத்தியுமே.
குறட்டையில் இருந்து விடுபட உதவும் முத்திரை
லிங்க முத்திரை, நாடிசுத்தி
லிங்க முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். பத்து முறைகள். பின் எல்லா விரல் களையும் இணைத்து பிணைத்து, இடதுகை கட்டைவிரல் மட்டும் நேராக வைக்கவும். இதயம் முன்னால் கைகளை வைத்து இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். இரவு படுக்கும்முன் இரண்டு நிமிடம் பயிற்சி செய்யவும்.
நாடிசுத்தி:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது பக்க மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.
பின் வலது கை மோதிர விரலால் இடது மூக்கை அடைக்கவும். வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து, வலது நாசியிலியேயே மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.
பின் வலது நாசியை கட்டை விரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை இழுக்கவும். உடன் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும். இதேபோல் பத்து முறைகள் செய்யவும். இதேபோல் மாற்றி செய்யவும். இடது நாசியை அடைத்து வலது நாசியில் மூச்சை இழுத்து வலதை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். இடதில் இழுத்து வலதில் வெளிவிடவும் பத்து முறைகள்.
இரவு படுக்கும் பொழுது சூடு தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்கவும். வாரம் ஒரு நாள் எட்டு மிளகு நுணுக்கி அரை டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து ஆறியவுடன் குடிக்கவும்.
வாரம் ஒரு முறை பத்து துளசி, பத்து அருகம்புல் கழுவி மென்று சாற்றைக் குடித்து சக்கையை துப்பிவிடவும். தொடர்ந்து பயிலுங்கள் குறட்டையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
நன்றி | மாலை மலர்